மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

மெர்க்குரி: வராமல் வந்ததைப் பார்க்க வேண்டாம்!

மெர்க்குரி: வராமல் வந்ததைப் பார்க்க வேண்டாம்!

மெர்க்குரி திரைப்படம் தமிழகம் தவிர்த்து உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோரும் ஆஹா, ஓஹோ எனப் புகழ்வதைச் சமூக வலைதளங்களில் பார்த்துத் தமிழக ரசிகர்களும் அபரிமிதமான ஆவலில் இருக்கின்றனர். ஆனால், அதற்காகக் கடும் உழைப்பைக் கொடுத்து உருவாக்கிய படைப்பைத் திருட்டுத்தனமாகப் படமாக்கி டிஜிட்டலில் அப்லோடு செய்த வழியில் பார்க்க வேண்டாம் என நடிகர் பிரபுதேவா கேட்டுக்கொண்டார்.

வசனமே இல்லாத திரைப்படமாக உருவாகியிருக்கும் மெர்க்குரி பல மர்மங்களைத் தன்னுள் கொண்டு வெளியாகியிருக்கிறது. இதில் மூத்த மர்மம் ஒன்று இருக்கிறது. இத்தனை காலமாகத் திருட்டு டிவிடி தயாரிக்கிறார்கள் என்று தமிழக தியேட்டர்களைக் குற்றம் சாட்டிய பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது, தமிழகத்தில் ரிலீஸாகாமல் திருட்டுத்தனமாக அப்லோடு செய்யப்பட்டிருக்கும் மெர்க்குரி திரைப்படம்.

மெர்க்குரி ரிலீஸான 14ஆம் தேதி இரவே, சில ஆன்லைன் பைரேட் இணையதளங்களில் அப்லோடு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி வெளியாகியிருக்கும் படத்தைப் பார்த்து புதிதாய் யோசித்து ஒரு படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர், பணம் செலவு செய்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் உழைப்பை வீணடிக்க வேண்டாம் என்று பிரபுதேவா வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மெர்க்குரி: விமர்சனம்

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon