மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சிறு போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆதரவு!

சிறு போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆதரவு!

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கண்டெய்னர்களை இடமாற்றம் செய்ய நான்கு போக்குவரத்து நிறுவனங்களை மும்பை ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் தேர்வு செய்துள்ளது. இதன்பின்னர், இறக்குமதியாளர்கள் தங்களுக்குத் தேவையான போக்குவரத்து நிறுவனங்களை தாங்களே சுதந்திரமாகத் தேர்வு செய்துகொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மே 1ஆம் தேதி முதல் புதிய போக்குவரத்து ஏற்பாடுகள் அமலுக்கு வரவிருக்கின்றன. இதன்படி எந்தவொரு போக்குவரத்து நிறுவனத்துடனும் நேரடி வர்த்தக ஏற்பாடுகளுக்குள் ஜவர்கலால் நேரு போர்ட் டிரஸ்ட் நுழையாது. முன்பு, தேர்வு செய்யப்பட்ட போக்குவரத்து நிறுவனங்களைப் பயன்படுத்தி கண்டெய்னர்களை துறைமுகத்திலிருந்து இடமாற்றம் செய்வதை ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கட்டாயமாக்கியிருந்தது. கண்டெய்னர்களை அவற்றுக்குத் தொடர்புடைய வழியில் இடமாற்றம் செய்ய வெற்றிகரமான போக்குவரத்து நிறுவனத்துக்குப் பிரத்தியேக உரிமை வழங்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நிறுவனங்களுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட போது, இறக்குமதியாளர்கள் தங்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து கொள்ளக்கூடாது என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்திருந்தது. போக்குவரத்து நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்குப் போடப்பட்டிருந்தது. மேலும், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் எனவும் பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் இறுதி செய்துள்ள போக்குவரத்து நிறுவனங்களைக் கணக்கில் கொள்ளாமல், இறக்குமதியாளர்கள் தங்களுக்குத் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என்று கப்பல் துறை செயலாளரான கோபால் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon