மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

மெரினாவில் போராட்டம்: வேல்முருகன்

மெரினாவில் போராட்டம்: வேல்முருகன்

காவிரிக்காக மெரினாவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னையில் இன்று (ஏப்ரல் 16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஐபிஎல் போட்டியை நடத்தவிடாமல் விரட்டப் போராடிய அனைவருக்கும் நன்றி. ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறக் கூடாது என்றபோதும் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டதால் பாம்பு விடுவோம் என்றேன்.

காவிரிக்காக மெரினாவில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். போராட்டத்திற்கு அனுமதிக் கோரி தமிழக அரசு மற்றும் காவல் ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும். ஜனநாயக வழியில் எங்களைப் போராட அனுமதிக்காவிட்டால் எங்களின் போராட்டம் வேறு திசையை நோக்கி இருக்கும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராகக் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி முன்பு நடைபெற்ற போராட்டத்தில், சுங்கச் சாவடியின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon