மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

சிறுவன் மரணம்: இ.ஏ. மீது வழக்கு!

சிறுவன் மரணம்: இ.ஏ. மீது வழக்கு!

எஸ்கலேட்டரில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் வணிக வளாகமான இ.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ (இ.ஏ) ஷாப்பிங் மாலுக்கு கடந்த 10ஆம் தேதியன்று நவீன் என்ற சிறுவன் தன் குடும்பத்தாருடன் சென்றிருந்தான். அப்போது இரண்டாவது தளத்திற்கு எஸ்கலேட்டரில் சென்றுகொண்டிருக்கையில் திடீரென சிறுவனின் பை எஸ்கலேட்டரில் சிக்கிக் கொண்டது. இதில் தடுமாறிய நவீன், எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த அச்சிறுவன் கடந்த சனிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று இந்த வணிக வளாகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon