மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

லண்டன் பயணத்திலும் கர்நாடகத் தேர்தல் பிரசாரம்!

லண்டன் பயணத்திலும் கர்நாடகத் தேர்தல் பிரசாரம்!

பிரதமர் மோடி இன்று அரசுமுறைப் பயணமாக சுவீடன், இங்கிலாந்து நாடுகளுக்குப் புறப்படுகிறார்.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் நார்டிக் நாடுகளின் உச்சி மாநாடு நாளை நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து லண்டனுக்குப் பயணமாகிறார். இங்கிலாந்தில் அவர் 4 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

இங்கிலாந்தில் லண்டன் தேம்ஸ் நதிக்கரையோரம் நிறுவப்பட்டு உள்ள 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி பசவேஸ்வரா சிலைக்கு மரியாதை செய்கிறார் மோடி.

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பசவேஸ்வரா, சாதிகளை ஒழிப்பதற்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதி. ஜனநாயக தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட இவருக்கு நாடாளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் சிலை வைக்கப்பட்டது. லண்டன் பயணத்திலும்கூட கர்நாடகத் தேர்தலை வைத்தே இந்த நிகழ்ச்சி தீர்மானிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon