மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

காலாவதியான கொசு மருந்து: சுகாதாரத் துறை அலட்சியம்!

காலாவதியான கொசு மருந்து: சுகாதாரத் துறை அலட்சியம்!

டெங்குவைத் தடுக்கவும் ஒழிக்கவும் கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கப்பட்ட கொசு மருந்துகள் சரியாகப் பயன்படுத்தாமல் காலாவதியானதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் மீண்டும் புதிய மருந்துகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சல் நாட்டையே உலுக்கியெடுத்தது. அப்போது தமிழக சுகாதாரத் துறை டெங்கு கொசுவை அழிக்க பைரேத்ரம் (Pyrethrum) என்ற மருந்தை லட்சக்கணக்கான லிட்டர்களில் வாங்கியது. வாங்கிய மருந்தை மாவட்ட டி.டி.ஹெல்த் அலுவலகத்துக்கு அனுப்பியது. மேலும், அந்த மருந்தை அதிகமாகச் செலவு செய்யாமல் விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், மாவட்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் நல்லபெயர் எடுப்பதற்காக ஊரில் கொசு மருந்து அடிக்காமல் வட்டாரத்துக்கு 50 லிட்டர் முதல் 100 லிட்டர் வரையில் இருப்பு வைத்துக்கொண்டனர். கொசு மருந்து அடிக்காதது குறித்து பொதுமக்கள் கேட்டபோதெல்லாம் மருந்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இருப்பு வைத்திருந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியானதால், கொசுவை அழிக்க டெமிபோஸ் (Temiphos) என்ற புதிய மருந்துகளை ஆர்டர் செய்துள்ளனர். ஒரு லிட்டர் தண்ணீரில் இந்த மருந்தை ஒரு சொட்டு மட்டும் கலந்து அடித்தால் கொசு முட்டைகளை அழித்துவிடும். கொசு முட்டைகளை அழித்தால் கொசுக்கள் வராது. முட்டையை அழிக்க மருந்து கொடுத்தவர்கள், மருந்து தெளிக்கும் மிஷின்கள் கொடுக்கவில்லை. யூனியன் அலுவலகங்கள் மூலம் வாங்கப்பட்ட மிஷின்கள் 60% வேலை செய்யவில்லை. ஆனால் அவற்றின் விலை மிகவும் அதிகம். இதையெல்லாம் யார் கேட்பார்கள் என ஆரம்ப சுகாதாரத் துறை அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon