மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஏப் 2018

தாழம்பூவும் சத்யம் தியேட்டரும்!

தாழம்பூவும் சத்யம் தியேட்டரும்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 45

இராமானுஜம்

தமிழ்த் திரையுலகில் மார்ச் 1 முதல் புதிய தமிழ் படங்கள் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தபோது இது சாத்தியமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. நேற்றுடன் 46 நாள்கள் நிறைவடைந்திருக்கின்றன.

தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என இரண்டு அமைப்புகளிலும் ஒற்றுமை வலுவடைந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடி மோதலில் இருந்த திரைப்பட தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் பெப்சி அமைப்பு வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணக்கம் காட்டி கடந்த 32 நாள்களாக வேலைவாய்ப்பைத் தியாகம் செய்துள்ளது.

பிப்ரவரி 23 அன்று இத்தொடரை எழுத தொடங்கினோம். தொடரின் இதுவரை வெளியான பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வெளியானவற்றுக்கு திரைத் துறையினர் மத்தியில் மட்டுமல்ல; பொது வெளியில் இருந்தும் வரவேற்பு அதிகம் இருந்தது எங்களுக்கே ஆச்சரியத்தைத் தந்தது. அந்தளவுக்கு சத்யம் தியேட்டர் சென்னை நகர மக்களின் பொழுதுபோக்குப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை அறிய முடிந்தது.

மலர்களில் தாழம்பூ வாசனை மிகுந்தது. அது இருக்குமிடத்தைச் சுற்றிலும் வாசனை மிகுந்திருக்கும், ஆனால் பெண்கள் தலையில் சூடிக்கொள்ள முடியாது. அது போன்றுதான் சத்யம் தியேட்டர் என்கிறார்கள் சிறு படத் தயாரிப்பாளர்கள்.

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முக தன்மை கொண்ட சசிகுமார் நடித்து, தயாரித்து இயக்கிய முதல் படம் சுப்பிரமணியபுரம். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சத்யம் சினிமாஸ் தியேட்டரில்தான் நடைபெற்றது. சுப்பிரமணியபுரம் ரீலீஸ் ஆன போது அப்படத்துக்கு சத்யம் சினிமாஸ் தியேட்டர் ஒதுக்கப்படவில்லை. காரணம், கேட்டபோது புதுமுகங்கள் நடித்த படம் ஓடாது என காரணம் கூறப்பட்டது. இல்லை படம் ஓடும் எனக் கூறிய போது, ‘நாங்க பார்க்காத சினிமாவா?’ என சுப்பிரமணியபுரம் படத்தை ஏளனமாகப் பேசியவர்தான் சினிமா விஞ்ஞானி "முனீர் கன்னையா ".

சுப்பிரமணியபுரம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றவுடன் தாங்களாக முன்வந்து சத்யம் தியேட்டருக்கு சுப்பிரமணியபுரம் படத்தைக் கேட்டு ஒப்பந்தம் செய்தார்களாம். அதே போன்றுதான் புதுமுகங்கள் நடித்த படங்கள் ஓடாது என இன்றும் கூறிவருகின்றனர்.

ஒரு வித்தியாசம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் ரீலீஸ் செய்வதற்கு எனக் காலை 8.30 மணிக்குக் காட்சிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், அது அரசு அனுமதித்த காட்சியல்ல.

சென்னை நகர வாழ்க்கையைப் பொறுத்தவரை விடுமுறை நாள்களில் காலை 10 மணிக்கு மேல்தான் மக்கள் நடமாட்டம் தொடங்கும். ஆனால், அந்தக் காலை நேரத்தைக் கல்லா நிரப்பும் நிகழ்வாக சத்யம் சினிமாஸ் மாற்றியிருக்கிறது.

புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகஸ்தர்கள் திரையிடப்படும் காட்சிக்கு 50% டிக்கெட்டுகள் வாங்கினால் தியேட்டர் கிடைக்கும். முடியாது என்றால் தியேட்டர் காலியாக இல்லை என நாகரிகமாகச் சொல்லி மறுத்துவிடுவது முனீர் கன்னையா வழக்கம்.

இந்தக் காலைக் காட்சியில் ரீலீஸ் செய்யப்பட்ட எந்தப் படத்துக்கும் சென்னையில் சுவரொட்டி ஒட்டிய காசுகூட தியேட்டர் வருவாயாக வருவதில்லை என்கின்றனர்..

முதல் போடாத சத்யம் சினிமாஸ் முனீர் கன்னையா புதிதாகப் படம் எடுத்துவரும் தயாரிப்பாளர்கள் ரிலீசுக்கு தியேட்டர் கேட்டு வரும்போது எஜமானனாகவே மாறிவிடுவார் என்கின்றனர்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் 80 சதவிகிதமானவர்கள் தியேட்டர் கேட்டுப்போகும்போது முனீர் கன்னையா, அவர்களை அமரக்கூடச் சொல்ல மாட்டாராம். அம்புட்டு மரியாதை தெரிந்தவராம். இவரால் பயன் அடைந்தவர்களைக் காட்டிலும் அழிக்கப்பட்டவர்கள்தான் அதிகம் என்கின்றனர்.

தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின் சென்னை நகரத்தில் சில தியேட்டர்களில் தாங்கள் கேட்கும் சதவிகித (50% - 50%, 60% - 40%) அடிப்படையில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்த தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிடுவதில்லை எனச் சங்கம் முடிவு எடுத்திருப்பதாகவும் இதில் முதல் மூன்று இடத்தில் சத்யம் சினிமாஸ் இடம்பெற்றிருக்கிறது எனக் கூறப்படுகிறது. சத்யம் சினிமாஸ் தாழம்பூவாகத் தொடரப்போகிறதா, பெண்கள் விரும்பி சூடிக் கொள்ளும் மல்லிகை பூவாக மாறப் போகிறதா?

அறிவிப்பு: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருக்குத் திரையரங்கு உரிமையாளர் ஒருவர் எழுதிய பகிரங்கக் கடிதம் மாலை 7 மணி பதிப்பில்...

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 16 ஏப் 2018