மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஏர் பஸ்: இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி மையம்!

ஏர் பஸ்: இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி மையம்!

பாந்தர் ஹெலிகாப்டர் உற்பத்திக்கான சர்வதேச மையத்தை இந்தியாவில் அமைக்கும் முயற்சியில் ஏர் பஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்திய அரசு ராணுவத் துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. ராணுவத்துக்கான உயர் தரத்திலான ஹெலிகாப்டர்களை வாங்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதைப் பயன்படுத்தி இந்தியாவில் பாந்தர் வகை ஹெலிகாப்டர்கள் தயாரிக்கவும் இதற்கான சர்வதேச மையமாக இந்தியாவை ஏற்படுத்தவும் ஏர் பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் பஸ் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் பிரேர் தே பசெட் தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “ஹெலிகாப்டர் திட்டங்களுக்கான முக்கிய தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள ஏர் பஸ் நிறுவனம் தயாராகவுள்ளது. அதற்கான ஆலோசனைகள் சில பங்குதாரர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் நடைபெற்று வருகிறது.

எங்கள் நிறுவனம் இந்தியாவில் கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இவற்றை இந்திய சந்தையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் AS565 பாந்தர் ஹெலிகாப்டர் வாங்க விருப்பமுடையவர்கள் இனி இந்தியாவிலிருந்தும் வாங்கலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon