மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

வாட்ஸப் வடிவேலு: அடேய் அட்சய திரிதியை!

வாட்ஸப் வடிவேலு: அடேய் அட்சய திரிதியை!

வரும் கல்வி ஆண்டிலிருந்நு CBSEஐ மிஞ்சும் வகையில் Syllabus வருகிறது.

QR CODE மூலம் மாணவர்களுக்கு வினாக்கள், துணுக்குகள், பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன.

எனவே, நம்பி அரசுப் பள்ளியை நாடுங்கள்.

PRIVATE SCHOOL மாணவர்கள் இனி அரசுப் பள்ளியை நோக்கி வர இருக்கிறார்கள் வெகு விரைவில்.

நன்றி

அடேய்ய்ய்.. இன்னும் பல கிராமத்து புள்ளைங்க படிக்கிற ஸ்கூல் ல ஆசிரியர் பற்றாக்குறை, கட்டிடம் இல்லாம மரத்தடி வகுப்பு, பஸ் இல்லாம நடந்தே போறது, அவ்வளவு தூரம் நடக்கனுமேன்னு பள்ளிக்கூடமே போகாத குழந்தைகள் ன்னு நிலமை இப்படி இருக்கு.. உண்மையா பொய்யா.. எந்த நாட்டு செய்தி இது, எப்போ யாரால் அறிவிக்கப்பட்ட செய்தின்னு கூட சொல்லாம அள்ளிவிடறீங்களே.. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா.. நம்ம மக்களும் மானாவாரியா வாட்சப் ல ஷேர் பன்றாங்க.. ஆனா இதையும் மக்கள் நம்புறாங்களே.. என்ன சொல்ல..

அடுத்ததா அட்சய திரிதியைக்கு ஆரம்பிச்சிட்டாங்க..

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகின்ற 18.4.2018 புதன் கிழமை அட்சய திருதியை ஆகும். அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். போன முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம். எனவே அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்து நமக்கு குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது சரியான முறை என்று நினைத்தால் தெரிந்தவர்களிடம் கூறி அவர்களையும் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்ய சொல்லவும். நீரின்றி அமையாது உலகு.

வழக்கமா தங்கம் வாங்கினா குவியும் அப்படின்னு கிளப்பிவிட்டு, இப்பதான் மக்கள் " அப்படின்னா விக்கிறவனுக்கு எப்படி காசு குவியுது" அப்படின்னு சுதாரிச்சிட்டாங்க மக்கள்.

இந்த மெசேஜ்-அ எந்த பிரிவுல சேக்கறதுன்னே தெரியல. மதங்களை சொல்லாம ஆண்டவர் அப்படின்னு சொன்னதுல புத்திசாலித்தனம் தெரியுது. ஆனா இதைத்தாண்டி இன்னும் நிறைய வரணுமே.. ஓ.. இன்னும் சில நாட்கள் இருக்கா.. காத்திருப்போம்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon