மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

ஜேஎன்யுவில் பேராசிரியர்களே காப்பியடித்து முனைவர் பட்டம்!

ஜேஎன்யுவில் பேராசிரியர்களே காப்பியடித்து முனைவர் பட்டம்!

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான கமிட்டியில் இடம்பெற்றுள்ள பேராசிரியர்களே தங்களது முனைவர் மற்றும் எம்பிஃல் ஆராய்ச்சி பட்டங்களுக்கு காப்பி அடித்துள்ளது தெரியவந்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் மாதத்தில் முதல் வாரத்தில் நான்கு பேராசிரியர்கள் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் முக்கிய நிர்வாகப் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் பெற்ற முனைவர் ஆராய்ச்சிப் பட்டங்களில் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை காப்பி அடித்துள்ளதை மாணவர்களே அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து துணைவேந்தரால் பேராசிரியர்களையும் ஆசிரியர்களையும் நியமிக்க ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதில் புதியதாக ஐந்து நபர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஐந்து பேரும் மற்றும் இரண்டு பேராசிரியர்களும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை காப்பி அடித்துள்ளனர் என்பதையும் மாணவர்களே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.

துணைவேந்தரும் மனிதவள மேம்பாட்டுத் துறையும் பாஜக அரசுக்கு வேண்டியவர்களை நியமித்து வருகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இக்குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.

இதில் புத்தா சிங் என்ற உதவி பேராசிரியர் கணிப்பொறி துறையில் பணிபுரிகிறார். இவர் தனது எம்டெக் ஆய்வுக்கு, சீன ஆராய்ச்சியாளர்கள் இருவர் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து ஏராளமான பகுதிகளை காப்பி அடித்துத் தன்னுடையதாகக் கையாண்டிருக்கிறார்.

இதுபோன்று பல பேராசிரியர்களும் உதவிப் பேராசிரியர்களும் ஆய்வுகளை காப்பி அடித்துச் சமர்ப்பித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon