மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ரஜினிக்கு எதிராக விவசாயிகள்!

ரஜினிக்கு எதிராக விவசாயிகள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி இன்று தஞ்சை தபால் நிலையம் எதிரே விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக மட்டுமல்ல, நடிகர் ரஜினிகாந்துக்கும் எதிராக விவசாயிகள் போராட்டக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காமல், ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று சென்னையில் நடந்த விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை, போலீசுக்கு எதிரான வன்முறை என்று ரஜினி ட்விட் செய்திருந்தார்.

இதுபற்றி ஆர்பாட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன், ‘’விவசாயிகளுக்காக சென்னையில் நடந்த போராட்டத்துக்கு வன்முறை முத்திரை குத்த முயற்சிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தமிழக இளைஞர்கள், அரசியல் கட்சிகள் காவிரிக்காக ஒன்றிணைந்து போராடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ரஜினிகாந்த், திட்டமிட்டு இதுபோன்று சதி செய்ய முயற்சிக்கிறார். இதன் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் இருந்து சில நிமிட வீடியோவை வெளியிட்டு, ஒட்டுமொத்தப் போராட்டத்துக்கும் வன்முறை வண்ணம் பூச ரஜினிகாந்த் துணிந்துவிட்டார். தமிழக இளைஞர்கள், கட்சிகள் ஒன்றுபட்டு விவசாயிகளுக்காக நிற்கையில்... ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழக போராட்டங்களை அவமானப்படுத்துகிறார். இந்த நிலை தொடர்ந்தால் மத்திய அரசுக்கு எதிராக போராடும் விவசாயிகள் ரஜினிக்கு எதிராகவும் போராடுவோம்’’ என்று எச்சரித்திருக்கிறார் பாண்டியன்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon