மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

இந்தியா - ரஷ்யா: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இந்தியா - ரஷ்யா: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

ஏப்ரல் 13ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள பாதுகாப்பு சாதனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரித்தல், சேவைகள் உள்ளிட்டவற்றுக்காக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா உற்பத்தி செய்யக் கூடிய 48 சாதனங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அடையாளம் கண்டு வைத்திருந்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் லார்சன் & ட்யூப்ரோ, ஜாய்ண்ட் ஸ்டாக் கம்பெனி உள்ளிட்டவை இந்திய கடற்படையின் பல்வேறு திட்டங்களுக்காக போர் வாகனங்கள், ராக்கெட்டுகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ஆனந்த் டெக்னாலஜீஸ், ரேடியோ-எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துக்கான ஜே.எஸ்.சி.யின் ஒப்பந்தம், ஸ்பேஸ் எரா மற்றும் கே.ஆர்.இ.டி.யின் தொழில்நுட்ப மற்றும் இடமாற்ற ஆதரவுக்கான ஒப்பந்தம் ஆகியவை அடங்கும்.

இந்திய ராணுவத்துக்கு சேவை செய்யும் பீரங்கிகளுக்கான இடமாற்ற ஆதரவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்குவதற்காக ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக் கழகத்துடன் ஆனந்த் டெக்னாலஜீஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரஷ்ய நிறுவனமான ஜே.எஸ்.சி. அகாட், ஆஸ்க்ரோஸோமரைன் மற்றும் கிரன்சே டிஃபன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் ஜே.எஸ்.சி. நிறுவனம் ஏவியாடெக் எண்டர்பிரைஸ் நிறுவனத்துடனும் சேவைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon