மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சண்டேன்னா இந்த கொடுமை தான்: அப்டேட் குமாரு

சண்டேன்னா இந்த கொடுமை தான்: அப்டேட் குமாரு

ஞாயிற்று கிழமையானா காலையிலேயே ஒரு கோழியை அடிச்சு குழம்பு வச்சு சாப்பிடவேண்டியது, அப்புறம் மத்தியானம் சிக்கனை வறுத்த போட்டோவை பேஸ்புக்ல போட்டு நாலு லைக்ஸ் வாங்கிட்டு, மூக்கு முட்ட சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு, சாயங்காலமா எந்திரிச்சு ஒரு டீயை குடிச்சுகிட்டே டிவியில ஒரு படத்தையோ ஐபிஎல் மேட்ச்சையோ பார்க்கவேண்டியது. அப்ப எல்லாம் பீலிங் ஹேப்பின்னு ஸ்டேட்டஸ் வைக்கிறாங்க. மணி ஏழு ஆகப்போகும் போது.. காய்ச்சல் வந்தமாதிரி மூஞ்சியை வச்சுகிட்டு நாளைக்கு திங்கள் கிழமை ஆபிஸ் போகுறதை நினைச்சு என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்னு புலம்புறாங்க. என்ன வாழ்க்கை சார் இது.. எல்லாரும் இந்த குமாரு மாதிரி ஆக முடியுமா? வெள்ளிக்கிழமை நைட் ஆனா குதிக்குறதும் கிடையாது, ஞாயிற்றுகிழமை நைட் ஆனா அழறதும் கிடையாது.. நமக்கு மக்கள் பணி எப்பவும் தொடர்ந்துகிட்டே இருக்குது. கண்ணை தொடைச்சுட்டு அப்டேட்டை பாருங்க. என் கண்ணு வேர்க்குது என்னன்னு பார்த்துட்டு வாறேன்.

@meenadmr

பக்தன்: கடவுளே இந்த உலகத்தில் நிம்மதியாக இருப்பவர்கள் யார்?

கடவுள்: எவன் ஒருவன் குறைவான வாட்ஸ் அப் குழுக்களில் இருக்கிறானோ, அவனே நிம்மதியாக இருக்கிறான்.

@sundartsp

ரூபாய் நோட்டில் இருப்பதால் காந்தி எந்த ஜாதியென்று ரொம்ப ஆராய்ச்சி பண்ணுவதில்லை போல

@chithradevi_91

" ட்விட்டரில் ஏற்பட்ட கருத்து மோதலில் இரண்டு பேர் வெட்டிக் கொலை " என்று செய்தித்தாள்களில் தலைப்பு செய்தி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை

@yugarajesh2

தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மணல் எடுப்பதில் உள்ள ஆர்வம் காவிரியை காப்பாற்றுவதில் இல்லை- சி.பி.ராதாகிருஷ்ணன்#

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை வஞ்சிப்பதில் உள்ள ஆர்வம் தமிழக மக்களை காப்பாற்றுவதில் இல்லை.?

@BlackLightOfl

புதிய மொபைல் வாங்கினவனுங்க கையும் புதிய ஹேர் ஸ்டைல் வச்சவனுங்க கையும் சும்மா இருக்காது.. நோண்டிக்கிட்டே இருக்கும்.!!

@sundartsp

மாட்டுத்தாவணில சும்மா போனாலே கோயம்பேடு எழும்பூர்ன்னு கூவுவாங்க, இப்போ எதாவது ஒரு சைட்டில் போய் பஸ் அவைலபிலிட்டி

பார்த்தாலே நம்ம மெஸேஜ் பாக்ஸில் கூவுறாங்க

@sundartsp

பசங்க நம் உயரம் வளர்வதில் ஒரு நன்மை பல்பு மாத்த நம்மை எதிர்பார்க்கமாட்டாங்க

@sendil

தேவையற்ற சிந்தனைகளே மன அழுத்ததிற்க்கு காரணம் !!

@BoopatyMurugesh

#GoBackModi ஹேஸ்டேக்கோட

#GoBackParthasarathy ஹேஸ்டேக் போட்ட.. அது யாரு பார்த்தசாரதி?

- அவன் என் ஆளுக்கு வீட்ல பார்த்த மாப்ள.. இந்த வாரம் அமெரிக்கால இருந்து வரானாம்..

ரைட்டு விடு..

@senthilcp

ஸ்டெர்லைட்டை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேவையில்லாமல் போராட வேண்டாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ #

இவ்ளோ"பேர், போராடுனதாலதானே மூட நடவடிக்கை எடுத்தீங்க?

@Kozhiyaar

வீட்டுக்குள்ள வந்த உடனே நம்ம பாஸ் கிட்ட இருந்து ஃபோன் வருவது மாதிரியான ரண கொடூரம் வேற எதுவும் இல்ல!!

@Akku_Twitz

அம்பேத்கரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது - தமிழிசை #

கங்கை அமரன ஆர்.கே நகர் இடைத்தேர்தல நிக்க வெச்சி அவரு சாதிய சொல்லி ஓட்டு கேட்டிங்களே அத சொல்றிங்களா?

@senthilcp

புதிய மொபைல் ஆப் மூலம், வீடுகளில் திருட்டு நடக்காமல் கண்காணிக்கும் திட்டம்..# முதல்ல,எல்லா பேங்க்

மேனேஜர்"ரூம்லயும்"வைங்க.அங்கே தான் கோடிக்கணக்குல கொள்ளை போகுது

@ajmalnks

அளவுக்கு அதிகமான சுதந்திரங்களுடன் சுற்றித்திரிந்து பாட்டி வீடுகளில் தங்குவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட விடுமுறையே முழு ஆண்டு

பரீட்சை விடுமுறை.

அது ஒரு பொற்காலம்

@BoopatyMurugesh

"சார் ஜீரோ பாருங்க.." என கூப்பிட்டு காட்டி பெட்ரோல் போடும் கடைநிலை ஊழியனிடம் உள்ள நேர்மை பெட்ரோல் நிறுவன பெரு

முதலாளியிடம் இருந்திருந்தால் பெட்ரோல் விலை இன்று குறைவாக இருந்திருக்கும்..

@Kozhiyaar

ஒருசில கடையில பிரியாணி சாப்பிட்டா அந்த கடை மேலே ஆசை வந்திடும்!!

ஒருசில கடையில பிரியாணி சாப்பிட்டா அந்த பிரியாணி மேல‌ இருக்க ஆசையே போய்டும்!!!

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!?

@iam_susi

வாங்கிய சம்பளத்தை விட,

வாங்க போகும் சம்பளத்திற்கே அதிகம் பட்ஜெட் போடப்படுகிறது...

@BlackLightOfl

அரசியல் வியாபாரம் ஆனதால்.. வியாபாரம் முழுவதும் அரசியல் ஆனது.!

@BlackLightOfl

அம்பேத்கர் கண்ட கனவுகளை நாடு முழுவதும் இன்று நனவாக்கி வருபவர் பிரதமர் மோடி - தமிழிசை

அவரு எப்போடா நாட்டை கார்ப்பரேட்டுக்கு எழுதி கொடுக்க கனவு கண்டவாரு..!

@sarvanz

இயற்கையா விளையுற வாழை இலைல சாப்பிடும் போது அதை கழுவும் நாம்

பிளாஸ்டிக் பேப்பர்ல சாப்பிடும் போது கழுவுரது இல்லை

#நிதர்சனம்

-லாக் ஆஃப்

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon