மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

தலித் என்று குறிப்பிட வேண்டாம் : மத்திய அரசு!

தலித் என்று குறிப்பிட வேண்டாம் : மத்திய அரசு!

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களில் ‘தலித்’ என குறிப்பிட வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் 1982ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிட்ட ஓர் உத்தரவை மேற்கோள் காட்டி, மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் சாதிச் சான்றிதழில் ஹரிஜன் என்ற வார்த்தையைக் குறிப்பிட வேண்டாம். அரசியலமைப்பு சட்டத்தில் தலித் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களை தலித் என குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அரசியல் சட்டத்தின் 341ஆவது பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில் எஸ்சி என மட்டுமே இருக்கிறது. எனவே, அலுவலக ரீதியாக நடைபெறும் கடித பரிமாற்றம், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்திலும், தாழ்த்தப்பட்ட பிரிவினரை எஸ்சி என ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிட வேண்டும். தலித் என குறிப்பிடக் கூடாது." இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon