மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

பார்வையற்றவர்களுக்கு புதிய ஆப்!

பார்வையற்றவர்களுக்கு புதிய ஆப்!

கோவையில் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக ஒரு நபர் வேண்டும். ஒருசிலர் இதற்கு தாமாகவே முன் வருவார்கள்.சில இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு ஆட்களை கட்டணம் செலுத்தி ஏற்பாடு செய்து தரும். இருப்பினும், தேர்வு எழுதுவதற்கு ஆள் ஏற்பாடு செய்வது கடினமாகவே இருக்கிறது.

இந்நிலையில், கோவையில் பார்வையற்றவர்கள் தேர்வு எழுத வசதியாக பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலர்களை இணைக்கும் வகையில் புதிய மொபைல் ஆப் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் YESABLE என்ற இந்த புதிய மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. பார்வையற்றவர்கள் இதனை தங்களது ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கான ஆட்களை தேடும் விவரங்களை இதில் பதிவிடலாம்.

இந்த ஆப் தற்போது ஆங்கிலத்தில் மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மொழிகளிலும் இந்த ஆப் வெளிவரும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பார்வையற்றவர்களுக்கு பயனளிக்கும் என கருதப்படுகிறது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon