மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

மாடலாகும் ஸ்ரீதேவி மகள்?

மாடலாகும்  ஸ்ரீதேவி மகள்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி -போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி கபூர், 'தடக்' என்ற இந்திப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இது மராட்டியில் வெளியான 'சாய்ராட்' படத்தின் ரீமேக். ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியாக இருந்த ஸ்ரீதேவி ஜான்வியின் முதல் படம் வெளிவரும் முன்பே இறந்துவிட்டார்.

இந்நிலையில் இரண்டாவது மகள் குஷி கபூர், சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து இவரும் சினிமாவில் நடிக்கத் தயாராகிவிட்டார் என்று சமூகவலைதளத்தில் கருத்துகள் வெளியாகின. ஆனால் இந்தச் செய்தியை போனி கபூரின் குடும்பத்தினர் மறுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளிட்டுள்ளது. 17 வயதான குஷி, திருபாய் அம்பானியின் இன்டர்நேஷனல் பள்ளியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் விரைவில் பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கிறார். அதனால் பள்ளியில் இறுதி ஆண்டு விழாவில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

"குஷி, முதலில் டாக்டராக வேண்டும் என்று நினைத்தார். பிறகு வழக்கறிஞராக வேண்டும் என்று நினைத்தார். இப்போது சர்வதேச மாடலிங் ஆக முடிவு செய்திருக்கிறார் "என்று ஒரு பேட்டியில் ஸ்ரீதேவி தன் மகள் குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon