மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

அம்பேத்கர் பிறந்தநாளும் அரசியல் கணக்கும்!

அம்பேத்கர் பிறந்தநாளும் அரசியல் கணக்கும்!

டாக்டர் அம்பேத்கரின் 128வது பிறந்த நாளான நேற்று, அவரது சிலைக்கு பல கட்சியினரும் அமைப்புகளும் நாடு முழுவதும் மரியாதை செய்தனர். ஆனால், சென்னையில் அதிமுக, அமமுக கட்சிகளிடையே இந்த நிகழ்விலும் போட்டா போட்டி இருந்தது தெரியவந்திருக்கிறது. அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்காக கூட்டத்தைக் கூட்டுவதில்தான் போட்டி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீரும் கோடம்பாக்கம் பவர் ஹவுசில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு 2 ஆயிரம் பேரோடு சென்று மாலை மரியாதை செய்தனர்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் சுமார் 2 ஆயிரம் பேரோடு சென்று துறைமுகம் வாசலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார், ஆனால் உளவுத்துறையினர் தினகரனுக்கு 1,700 பேர் கூட்டம் வந்துள்ளதாக ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.

திமுக, விசிக கூட்டத்தையும் கணக்கு கொடுத்துள்ளார்கள். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 700 பேர் கூட்டத்தோடு கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டுள்ளார் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் சுமார் 150 பேருடன் சென்று மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலைபோட்டுக் கோஷமிட்டு வாழ்த்தியதையும் முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள். அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவதிலும் மக்கள் கூட்டம் அதிமுகவுக்கும் அமமுகவுக்கும்தான் போட்டி என்கிறார்கள் அவர்கள்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon