மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ராபி உற்பத்தி: இலக்கை அடைவதில் சிக்கல்!

ராபி உற்பத்தி: இலக்கை அடைவதில் சிக்கல்!

பருவமழை தட்டுப்பாடு மற்றும் பனிப்பொழிவு காரணமாக ராபி உற்பத்தியில் பாதிப்பு காணக்கூடும் என்று மத்திய வேளாண்துறை கூறியுள்ளது.

2017-18 வேளாண் பருவ ஆண்டில் (ஜூலை-ஜூன்) உணவு தானிய உற்பத்தி 277.5 மில்லியன் டன்னாக இருக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்தது. இது முந்தைய காலங்களை விட அதிகமாகும். பருவமழை வழக்கத்தைக் விடக் குறைந்துள்ளதால் மதிப்பீட்டின்படி உற்பத்தி இலக்கை அடைய இயலாது என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வட மாநிலங்களின் சில பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவும் உற்பத்தியைப் பாதித்துள்ளது.

இந்த ஆண்டு பருவகாலத்தில் வழக்கமாகப் பெறும் மழைப்பொழிவில் 95 சதவிகிதத்தை மட்டுமே இந்தியா பெறுமென்று வானியல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல "உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களின் முக்கிய வேளாண் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பனிப்பொழிவு இல்லை. ஆனால் இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. காற்றின் வேகத்தைப் பொறுத்தவரையில் மணிக்கு 50-60 கிலோமீட்டராக இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை" என்றும் வானிலை ஆய்வுகள் கூறுகின்றன.

பனிப்பொழிவு காணப்படுகின்ற எந்த மாநிலத்தில் இருந்தும் இதுவரையில் பாதிப்பு குறித்து எதுவும் கூறப்படவில்லை என்று மத்திய வேளாண்துறை செயலாளர் எஸ்.கே.பட்நாயக் பினான்சியல் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியுள்ளார். மேலும், "பனிப்பொழிவு மற்றும் பருவமழைக் குறைபாட்டால் உற்பத்தியில் 100 சதவிகிதம் இலக்கை அடைவதும் சிரமமாகியுள்ளது. உற்பத்தியில் சிறிதளவு குறையலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon