மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

போர்கப்பல்களைக் காண அலைமோதும் மக்கள்!

போர்கப்பல்களைக் காண அலைமோதும் மக்கள்!

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய போர்க் கப்பல்களை பார்வையிட இன்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் உள்ள துறைமுகத்தில் ராணுவ கண்காட்சியையொட்டி ஐராவத், ‌ஷயாத்ரி, சுமித்ரா, ஹமோர்தா ஆகிய 4போர்க்கப்பல்கள் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட இன்றே (ஏப்ரல் 15) கடைசி நாள்என்பதால் மக்கள் இதனைக் காண ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "காலை 7.30 மணி முதல் மக்கள் கூட்டம் வரத் தொடங்குகிறது. கேட்டில் இருந்து சுமார் 500 மீட்டர்தொலைவிற்கு க்யூ நிற்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தச் சிரமமாக இருந்தது. இதனையடுத்து பேட்ச் வாரியாக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்புமற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon