மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஹெல்த் ஹேமா: உங்கள் குழந்தையின் எடை சரியாக இருக்கிறதா?

ஹெல்த் ஹேமா: உங்கள் குழந்தையின் எடை சரியாக இருக்கிறதா?

உடல் எடையைத் தேற்றுவது என்பது குழந்தைப் பருவம் முதலே இருக்கவேண்டிய அக்கறை. இந்தியாவில், குழந்தைகளின் எடை குறைவுக்கு மிக முக்கியக் காரணம் பிரைமரி காம்ப்ளெக்ஸ்தான். சிறு குழந்தையாக இருக்கும்போதே இதைச் சரியாகக் கவனிக்கத் தவறும்போது பின்னாளில் எப்போதும் மெலிந்த தேகம் நிலை பெற்றுவிட வாய்ப்பு உண்டு.

செரில்களில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் போதிக அளவில் நிறைந்துள்ளன. ஆகவே தினமும் காலையில் செரில்களை பாலில் போட்டு கொடுத்து வாருங்கள்.

பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அது சுவையாக இருப்பதோடு, குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும்

பால் பொருட்களான பால் மற்றும் க்ரீம்களில் கலோரிகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் உங்கள் குழந்தைக்கு தவறாமல் 2 டம்ளர் பால் கொடுங்கள். மேலும் செரில் ஏதேனும் சாப்பிடுவதற்கு கொடுப்பதாக இருந்தால், அத்துடன் க்ரீம் சேர்த்துக் கொடுங்கள்.

முட்டையில் புரோட்டீன் வளமாக உள்ளது. இதனை தினமும் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 போன்றவை அதிகம் உள்ளது.

வாழைப்பழத்தில் உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும் உட்பொருட்கள் மற்றும் கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

செரில்களில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் போதிக அளவில் நிறைந்துள்ளன. ஆகவே தினமும் காலையில் செரில்களை பாலில் போட்டு கொடுத்து வாருங்கள்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon