மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

முத்துசாமி மனைவி மரணம்: ஆறுதல் கூறும் முதல்வர், துணை முதல்வர்!

முத்துசாமி மனைவி மரணம்: ஆறுதல் கூறும் முதல்வர், துணை முதல்வர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போது திமுகவில் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருப்பவருமான முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஏப்ரல் 14) மரணம் அடைந்தார்.

சில நாள்களுக்கு முன் திமுகவின் ஈரோட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய முத்துசாமியை ஸ்டாலின் பாராட்டினார். இந்த நிலையில் முத்துசாமி மனைவியின் மரணத்துக்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மட்டுமல்லாது; அவரது அதிமுக நண்பர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். முத்துசாமியைத் தொடர்புகொண்டு பல அமைச்சர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முத்துசாமிக்கு இரங்கல் தெரிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவரை விரைவில் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon