மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஆன்லைன் பில்லால் பாதிப்பு!

ஆன்லைன் பில்லால் பாதிப்பு!

மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்தில் 50,000 ரூபாய்க்கு அதிகமான மதிப்புகொண்ட சரக்குப் பொருள்களுக்கு ஆன்லைன் பில் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட 12 நாள்களில் சரக்குப் போக்குவரத்து வழக்கத்தை விட 15 சதவிகிதம் குறைவடைந்துள்ளதாகப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

50,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சரக்குப் பொருள்களை மாநிலங்களுக்கிடையே இடமாற்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் பில் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ராபி பருவத்தின் வேளாண் உற்பத்தியை முன்கூட்டியே இடமாற்றம் செய்துவிட்டதால் சரக்குப் போக்குவரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். வேளாண் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் பில் பெறுவதற்கான தேவை இல்லை. ஆக, வேளாண் சரக்குகளை கட்டமைப்பதற்கான தேவையும் இல்லை.

இருப்பினும், 10 நாள்களாக நிலவி வந்த கடும் மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் சரக்குப் போக்குவரத்து ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஆன்லைன் பில் வசதியாலும், ஒழுங்கற்ற பருவ நிலையாலும் சரக்குப் போக்குவரத்து 30 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக இந்தியப் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தளத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் உள்மாநில சரக்குப் போக்குவரத்துக்கான ஆன்லைன் பில் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon