மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சாவித்திரியாக மாறிய கீர்த்தி

சாவித்திரியாக மாறிய கீர்த்தி

நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவராக இருப்பாரா என்ற கேள்விக்கு டீசரிலேயே அவர் பதிலளித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் இந்தப் படம் தயாராகிவருகிறது. அண்மையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிப்புகள் வெளியாக தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது. படத்துக்காக உடல் எடையை அதிகரித்து சாவித்திரியாக மாற முயற்சித்துள்ள கீர்த்தி சுரேஷின் உழைப்பு டீசரைப் பார்க்கும்போது தெரிகிறது. கதாநாயகி கீர்த்தி சுரேஷை மையமாக வைத்து அவரை அறிமுகப்படுத்தும்விதமாக டீசர் அமைந்திருந்தாலும் சமந்தாவின் குரலிலேயே அது நிகழ்கிறது.

தன்னைப் பார்க்க திரண்டிருக்கும் ரசிகர்களைப் பார்த்து மாடியிலிருந்து கீர்த்தி சுரேஷ் கையசைக்கிறார். மருத்துவமனையில் தனது கணவருடன் குழந்தையைக் கொஞ்சுகிறார். படப்பிடிப்பு காட்சிகளும் இடம்பெறுகின்றன. சமந்தா பத்திரிகையாளராக மதுரவாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் விஜய தேவரகொண்டா இணைந்து நடித்துள்ளார்.

டீசரில் படம் பற்றிய பெரிதான தகவல்கள் இல்லையென்றாலும் பிரதான கதாபாத்திரங்களுக்கான அறிமுகமாக அமைந்துள்ளது. மே 9ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

நடிகையர் திலகம்

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon