மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

தலைமை நீதிபதியின் கடமை: வரையறுக்க நீதிபதிகள் குழு!

தலைமை நீதிபதியின் கடமை: வரையறுக்க நீதிபதிகள் குழு!

தலைமை நீதிபதியின் பரந்த கடமைகளையும் பணிகளையும் வரையறுக்க உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக நீதித் துறை செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினா். அதில் தலைமை நீதிபதியினால் வழக்குகள் பிரிக்கும் முறை குறித்து தங்களது விமர்சனங்களையும் அதிருப்தியையும் வெளியிட்டனர். இது நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்குள்ளேயே உள்ளக் குமுறல்களை வெளிக்கொணர்ந்தது.

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை நீதிபதி வழக்குகளை பிரித்துக்கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாக நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இப்பிரச்சினைகளைத் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறினா். இது நாடு முழுவதும் பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட மூத்த நீதிபதி செலமேஸ்வர் மேலும் இப்பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் நீதிபதிகளுடையே உள்ள பிரச்சினைகளை தீர்த்து சுமுக உறவுகளை உருவாக்கும் நோக்கில் நீதிபதிகள் எஸ்ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகிய மூத்த நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடமும் நீதிபதி செலமேஸ்வரரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் பல மரபுகளையும் நடைமுறைகளையும் நிறுவனமயமாக்குவதே இக்குழுவின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon