மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

இதையெல்லாம் செய்தால்?

இதையெல்லாம் செய்தால்?

முதலீடுகளுக்குப் புத்துயிர் கொடுக்கவும் ஏற்றுமதியில் போட்டித் தன்மையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகித வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கியின் பொருளாதார வல்லுநரான அபிஜித் சென் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அபிஜித் சென் குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துதல், விநியோக அமைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றை நிறைவேற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இவற்றில் ஏராளமான சீர்திருத்தங்களுக்கான மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் முதலீடுகளும் ஏற்றுமதியும் சிறப்பாக இல்லை. இவையிரண்டும் சூடுபிடித்துவிட்டால் இந்தியாவால் 8 சதவிகித வேகத்தில் வளர்ச்சி அடைய முடியும்” என்று கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் இந்தியா 7.3 சதவிகித பொருளாதார வளர்ச்சியையும், அடுத்த நிதியாண்டில் 7.6 சதவிகித பொருளாதார வளர்ச்சியையும் அடையும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி எதிர்பார்க்கிறது. ஏற்றுமதியைக் குறித்து பேசுகையில், சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா இன்னும் குறுகிய ஏற்றுமதியாளராகவே இருப்பதாகவும், ஏற்றுமதியை அதிகரிக்க ஏராளமான திறன் இருப்பதாகவும் அபிஜித் சென் குப்தா தெரிவித்துள்ளார். சீனாவில் ஊதியங்கள் அதிகரித்துவருவதால் ஏற்றுமதி பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்தி இந்தியா தன் போட்டித் தன்மையை மேம்படுத்திக்கொண்டு பலன்களை அனுபவிக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon