மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒரே நாளில் மூவர் பலி!

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒரே நாளில் மூவர் பலி!

சென்னையில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ரயிலில் இருந்து தவறி விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டு மட்டும் 6,500 வழக்குகள் படியில் பயணம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டது. இது 2017ஆம் ஆண்டு 7,627 வழக்குகளாக அதிகரித்தது என்று சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

படியில் பயணம் செய்வதால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்க ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. படியில் பயணம் செய்பவர்களை வீடியோ படம் எடுத்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையில் வீடியோ எடுக்கும் பணி தொடங்கியது. இருப்பினும் எந்தப் பலனும் இல்லை.

இந்த நிலையில் நேற்று ரயிலில் இருந்து வெவ்வேறு பகுதிகளில் தவறி விழுந்து ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் இருந்து தவறி விழுந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைமேடை இரண்டில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த 55 வயது மதிக்கத்தக்கவர் உயிரிழந்தார்.

அதுபோன்று, செங்கல்பட்டு அருகே பரனூர் ரயில் நிலையப் பகுதியில் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த 50 வயது மதிக்கத்தக்கவர் பரிதாபமாக உயிரிழந்தார்

இவ்வாறு ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon