மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

பத்மாவத் வலிகளை எழுதும் பன்சாலி

பத்மாவத் வலிகளை எழுதும் பன்சாலி

பத்மாவத் திரைப்படத்துக்குப் பின் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் அடுத்தப் படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்க, அவர் புத்தகம் எழுதும் பணியில் இறங்கவுள்ளார்.

பத்மாவத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வந்தாலும், படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வெளியான பின்பும் கூடச் சந்தித்த பிரச்சினைகள் சாதாரணமானது அல்ல. வன்முறைகளையும் கொலைமிரட்டல்களையும் எதிர்கொண்டு படம் வெளியாகுமா எனும் கேள்வியுடனே உருவாகியது. பன்சாலியே இந்தக் காரணங்களுக்காக படத்தின் வெற்றியைக் கொண்டாட மனமில்லை என்று தெரிவித்திருந்தார்.

தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் குடும்ப நண்பர் டெக்கான் க்ரானிக்கிலுக்கு அளித்த பேட்டியில், “அது ஓர் அதிர்ச்சிகரமான காலமாக இருந்தது. அப்போது சந்தித்த பின்னடைவு அவரை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் படத்தில் என்ன காட்ட விரும்பினாரோ அதற்கு நேர் எதிராகக் குற்றம்சாட்டப்பட்டார். பத்மாவத் திரைப்படம் ராஜபுத்திரர் சமூகத்தை வீரம் நிறைந்தவர்களாக உருவாக்கியது. அதற்கு மாறாக அதை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். இந்த வலிகளைத் திரைப்படமாக அல்லாமல் புத்தகத்தில் பதிவு செய்யவுள்ளார்” என்று கூறியுள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon