மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

தமிழக அரசு: பிணையப் பத்திரங்கள் ஏலம்!

தமிழக அரசு: பிணையப் பத்திரங்கள் ஏலம்!

ரூ.1500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளரான க.சண்முகம் இதுகுறித்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரூ.1,500 கோடி மதிப்பிலான பத்தாண்டுக் கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் வருகிற 17ஆம் தேதி இந்த ஏலம் நடைபெறவுள்ளது’ என்று கூறியுள்ளார்.

போட்டி ஏலமாகவும், போட்டியற்ற ஏலமாகவும் இரண்டு வகையில் ஏலக்கேட்புகள் நடத்தப்படவுள்ளன. போட்டி ஏலத்துக்கு ஏப்ரல் 17ஆம் தேதியன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலும், போட்டியற்ற ஏலத்துக்குக் காலை 10.30 மணி முதல் 11.30 வரையிலும் ஏலக்கேட்பில் பங்கேற்க விரும்புபவர்கள் அங்கு வந்து இந்திய ரிசர்வ் வங்கியின் மின்னணு படிவத்தில் சமர்பிக்க வேண்டுமெனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தமிழ்நாடு மக்கள் செய்தித் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon