மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

வாட்ஸப் வடிவேலு: நானும் ஒரு தொழிலாளி!

வாட்ஸப் வடிவேலு: நானும் ஒரு தொழிலாளி!

சைடு மிா்ரா் மாட்டி,

முன் & பின் கண்ணாடியில ஸ்டிக்கா் ஒட்டி,

ஸ்டீாியங்குக்கு ஒயா் சுத்தி,

சென்டா் மிா்ரா்கள் மாட்டி,

கிளட்ச் பெடல் ரப்பா் பூட்டு மாட்டி,

ஸ்லாக் அட்ஜஸ்ட் மாட்டி,

கியா் ராடு நாப் மாட்டி,

வண்டியைக் கூட்ட பிரஸ் கட்டையை வாங்கி,

ஹெட்லைட் பல்ப் மாட்டி,

ஹெட்லைட் டூம் மாட்டி ,

R H பால்ஜாயிண்ட் மாட்டி (TATA),

டேப் மாட்டி,

ஸ்பீக்கா் மாட்டி பாட்டு போட்டு,

சைடுபாடில கலா் கலரா குமிழ் லைட் மாட்டி,

டூல்ஸ் செட் வாங்கி கைவசம் வெச்சு,

அடிக்கடி பிரேக் வெச்சு,

இன்னும் என்னென்னமோ சொந்த பணத்தல வண்டிக்காக நாம செலவு செஞ்சு,

நேரத்துக்கு சாப்பிடாமல், நேரத்துக்கு தூங்காமல், தூக்கத்தைத் தியாகம் பண்ணி,

தனியாா் டிரைவா், கண்டக்டாிடம் சண்டையைப் போட்டு,

நம்ம சகோதர கிளை டிரைவா், கண்டக்டா்களிடம் சங்கடப்பட்டு,

நம்ம வாய்வலிக்க சப்தம் போட்டு, போட்டு, போட்டு,

பயணிகளைப் பாதுகாப்பா ஏத்தி, இறக்கி,

(எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும், யாராவது வண்டிலிருந்து வெளியே குட்டிக்கரணம் வேற)

இவ்வளவு சிரமத்தல நாம சம்பாருச்சு கொண்டுபோனா

என்னப்பா டீசல் அதிகமென டிரைவாிடமும்,

என்னப்பா வசூல் குறைவுனு ,

நம்மள டாா்ச்சா் செஞ்சு,

நல்லவா்கள் போலவே வேசமிட்டு,

லட்சங்கள் அடிச்சாலும் பரவாயில்லை,

பல கோடிகளை அல்லவா ஸ்வாக செஞ்சுறாங்க...

(நல்ல வாயன் சம்பாருச்சு நார வாயன் திண்பது இதுதானோ)

இதை திசை திருப்பவே சில நேரங்களில், நமக்குச் சம்பந்தமில்லாத குற்றச்சாட்டு குறிப்பானை வழங்குகிறாா்கள்.

ஆக, தோழா்களே, யாாிடமும் சண்டைபோடாமலும்,டென்சன் இல்லாமலும் வாகன போட்டிகள் இல்லாமல் பணி செய்ய பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,

நானும் ஒரு தொழிலாளியாக

MTC சிங்காரம்

எந்த ஊரு, என்ன விலாசம் எதுவுமே போடலயேப்பா...

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon