மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

பியூட்டி ப்ரியா: பளபளக்கும் கூந்தல் அழகைப்பெற...

பியூட்டி ப்ரியா: பளபளக்கும் கூந்தல் அழகைப்பெற...

முல்தானி மட்டி, பல்வேறு இயற்கை அழகு சாதனங்களுடனும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான தோல் சார்ந்த அழகுக் குறிப்புகள் முல்தானி மட்டி இல்லாமல் இடம்பெறாது. ஆனால், இந்த முல்தானி மட்டியானது கூந்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிப்பது என்பது தனிச்சிறப்பு.

எலுமிச்சைச் சாற்றுடன், முல்தானி மட்டி சேர்த்து கசக்கினால் தலை முடியில் இருக்கும் எண்ணெய்ப் பிசுக்கு முழுமையாக தொலைந்துப் போகும்.

சமையல் சோடா, தலைமுடி பராமரிப்பில் பல வகைகளில் பயன்படுகிறது. ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை ஒரு கோப்பை தண்ணீருடன் சேர்த்து தலைமுடிக்கு மென்மையான முறையில் ஒத்தடம் கொடுங்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கமான முறையில் குளிக்க வேண்டியது தான். இந்த இடத்தில் நீங்கள் ஷாம்பூ போன்ற திரவியத்தைத் தேட மாட்டீர்கள்!

தலைமுடியை முழுவதுமாக சுத்திகரிக்க செம்பருத்திப் பூக்களின் இதழ்கள் மற்றும் இலைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. செம்பருத்திப் பூவின் இதழ்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து பின்னர் அதைத் தலையில் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் இயல்பான முறையில் தங்கள் தலையை சுத்தம் செய்ய வேண்டியதுதான். இதே போன்று செம்பருத்தி இலையைப் பயன்படுத்தியும் பயன் பெறலாம்.

கேரளத்துப் பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் அவர்கள் ஷாம்பூவுக்குப் பதிலாகச் செம்பருத்தி பூவை சீகைக்காயைப் போல அரைத்து தங்களின் கூந்தலுக்குப் பயன்படுத்துவார்கள்.

தலைமுடிக்கு ஈரப்பதம் மிக அவசியம். அதனால்தான் நம்முடைய முன்னோர் தலை குளிரும் அளவுக்குத் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இவ்வாறு போதிய ஊட்டச்சத்து இல்லாமையாலும் மாசுகள் போன்ற பல காரணங்களால், தலைமுடியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon