மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

இந்தியர்களை ஓரங்கட்டும் அமெரிக்க அரசு!

இந்தியர்களை ஓரங்கட்டும் அமெரிக்க அரசு!

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான ஹெச்1பி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்துள்ளது.

அதிக திறமைமிக்கவர்கள் அமெரிக்காவில் வந்து தங்கி பணிபுரிய அமெரிக்க அரசால் வழங்கப்படுவதுதான் இந்த ஹெச்1பி விசா. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 85,000 பேருக்கு ஹெச்1பி விசா அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலிருந்து 2018-19 ஆண்டுக்காக அமெரிக்கா செல்ல இந்த ஆண்டில் மொத்தம் 1.90 லட்சம் விண்ணப்பங்கள்தான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முந்தைய ஆண்டில் சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் போடப்பட்டிருந்தன. அதாவது இந்த ஆண்டில் 8,902 விண்ணப்பங்கள் (4.5%) குறைந்துள்ளன. அமெரிக்க அரசின் பாதுகாப்பு வாதக் கொள்கைகளால் இச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களைவிட அமெரிக்கர்களையே அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதனால் அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல அமெரிக்க பணியாளர்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றன. முன்னதாக 2016-17 ஆண்டில் 2.4 இந்தியர்கள் ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில் தற்போது 20 சதவிகிதச் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon