மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை பொடிமாஸ்!

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை பொடிமாஸ்!

தேவையான பொருள்கள்:

பலாக்கொட்டை = 25

வெங்காயம் = 50 கிராம்

பச்சை மிளகாய் = 4

இஞ்சி = அரைய‌ங்குலம்

தேங்காய் = கால் மூடி

எலுமிச்சை சாறு = 1 ஸ்பூன்

கொத்தமல்லி = கால் கட்டு

கடுகு = அரை ஸ்பூன்

பெருங்காயம் = அரை ஸ்பூன்

உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்

கடலை பருப்பு = 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் = 1

எண்ணெய் = தேவையான அளவு

உப்பு = தேவையான அளவு

செய்முறை:

பலாக்கொட்டை முற்றலாக ருக்க வேண்டும். இதை தோலோடு வெறும் வாணலியில் தோல் சிறிது கருகும் அளவிற்கு சிறு தீயில் வறுத்து உரித்துக் கொள்ளவும்.

உரித்த கொட்டையை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். கொட்டை சில்லு சில்லாகப் பெயர்ந்து விடும். இல்லாவிட்டால் கொட்டையை துருவிக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவி கொள்ளவும். கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற விட்டு நீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி வதக்கி உதிர்த்த கொட்டை, தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும். வெந்ததும் தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி எடுக்கவும்.

பிறகு பேனில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், ஊறிய கடலை பருப்பு தாளித்து கொட்டவும்.

சுவையான பலாக்கொட்டை பொடிமாஸ் தயார். இதை எல்லா வகையான ரைஸோடும், சப்பாத்தி, பூரி ஆகியவற்றோடும் பரிமாற‌லாம்.

கீர்த்தனா சிந்தனைகள்

குடிக்கிறதுக்கு தண்ணிய ஃப்ரிஜ்ல வச்ச காலம் போய் .. இப்ப குளிக்கிறதுக்கு ஃப்ரிஜ்ல வைக்கணும் போல இருக்கு .. எப்பா என்ன வெயில்

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon