மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஸ்டெர்லைட் போராட்டம்: ஆட்சியர் எச்சரிக்கை!

ஸ்டெர்லைட் போராட்டம்: ஆட்சியர் எச்சரிக்கை!

‘ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் ஆலைக்கு எதிராக தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 60 நாள்களுக்கும் மேலாக குமரெட்டியாபுரக் கிராம மக்கள் போராடி வருகின்றனர். இவர்களுடன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் சில சமூக விரோதிகளால் திசை திருப்பப்படுவதாக நேற்று தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. மக்கள் கோரிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் மக்களுக்கு அச்ச உணர்வைத் தூண்டும் வகையிலும், அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையிலும் சிலர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon