மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஏப் 2018

ஐபிஎல்: வெளியேறிய வீரர் - மேலும் பின்னடைவு!

ஐபிஎல்: வெளியேறிய வீரர் - மேலும் பின்னடைவு!

தட்டுத் தடுமாறி விளையாடிவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, மிகப் பெரும் பின்னடைவாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்லேஷ் நாகர்கோடி வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஐபிஎல் போட்டியின் ஏலம் நடைபெற்றபோது அனைவரையும் வியக்கவைத்த ஒப்பந்தமாக கம்லேஷை கொல்கத்தா அணி வாங்கிய சம்பவம் கருதப்பட்டது.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணியில் விளையாடியவர் கம்லேஷ். இளம் வீரராக இவரை எடுத்து, அணிக்கு ஒரு வலிமையான பந்து வீச்சாளரை உருவாக்கக் கருதியே கொல்கத்தா அணி 3.20 கோடிக்கு கம்லேஷை வாங்கியது. ஆனால், ஐபிஎல் பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட காயத்தினால் இவர் ஐபிஎல் போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே கம்லேஷுக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும், விரைவில் குணமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொல்கத்தா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் கடந்த இரண்டு போட்டிகளிலும் சரிவரச் செயல்படாததால், அவருக்கு பதிலாக கம்லேஷை அணியில் சேர்த்துவிடலாம் என்றுகூடக் கருதினார்கள். ஆனால், காயம் குணமாகத் தாமதமாவதால் கம்லேஷுக்கு பதில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரதீஷ் கிருஷ்ணா அணியில் சேர அழைக்கப்பட்டிருக்கிறார்.

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

சனி 14 ஏப் 2018