மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்!

5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்!

தமிழ்p புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், கோவையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மனுக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கோவை காட்டூர் பகுதியில் உள்ள அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஆண்டுதோறும் அம்மன் சிலைக்குப் பணத்தினால் அலங்காரம் செய்வது வழக்கம்.

அதன்படி, இன்று தமிழ்ப் புத்தாண்டில் ஐந்து கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளினால் முத்துமாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய், 50 ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நவரத்தினம், வைரம், தங்கம் உள்ளிட்ட நகைகள் முத்துமாரியம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை ஏராளமான மக்கள் தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். ஆண்டுதோறும் அலங்காரம் செய்யப்படும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பாலகணபதி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நான்கு லட்சம் செலவில் விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது; இதுவும் ஆண்டுதோறும் நடக்கும் வழக்கம்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon