மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

டிப்ளமோ தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

டிப்ளமோ தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

தொடக்கக் கல்வி ஆசிரியர் பதவிக்கான, டிப்ளமோ தேர்வுக்கு, ஏப்ரல் 16ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேரத் தேவையான, டிப்ளமோ படிப்புக்கான தேர்வு, ஜூன் 4ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தனித் தேர்வர்கள், தங்கள் விவரங்களை, இணையதள முகவரியில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் 50 ரூபாய் செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு தனித் தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில், குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே ஹால் டிக்கெட் பெற முடியும். எனவே, ஒப்புகைச் சீட்டைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon