மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

இந்திய உளவாளியா சானியா மிர்சா?

இந்திய உளவாளியா சானியா மிர்சா?

இந்திய உளவாளியாக ஆலியா பட் நடித்துள்ள ராஸி படத்தின் கதை தன்னுடையதல்ல என்று தெரிவித்துள்ளார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

பாலிவுட் இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் கரன் ஜோஹர் மற்றும் வினீத் ஜெயின் ஆகியோரால் தயாரிக்கப்படும் ராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை ஆலியா பட். உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படம் ஹரிந்தர் சிக்கா என்று அழைக்கப்படும் சேமத் என்ற நாவலின் தழுவலாகும். சேமத் என்ற பெண்மணியின் நிஜ வாழ்க்கையைப் பற்றி இந்நாவலில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் பெண்ணான சேமத் பாகிஸ்தானிய அதிகாரிகளைப் பற்றிய உளவுத் துறை விவரங்களைச் சேகரித்து இந்தியப் படைகளுக்கு அனுப்பும் நோக்கத்துடன் பாகிஸ்தானிய அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறார். இதில் இந்திய உளவாளியாக ஆலியாவும், பாகிஸ்தானிய அதிகாரியாக விக்கி கவுஷலும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்துள்ளது. இதையடுத்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட்கன்டு என்ற இணையதளப் பத்திரிகை, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் , "ராஸி படத்தில் வரும் விஷயம் எல்லாமே உங்களுக்குப் பொருந்துகிறதே. இது உங்கள் கதையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள சானியா, "அது நான் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும் இந்தியாவுக்காக விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon