மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

சரக்கு ஏற்றுமதி நிலவரம்!

சரக்கு ஏற்றுமதி நிலவரம்!

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18ஆம் ஆண்டில் 9.8 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது. இதே நேரத்தில் சரக்குப் பொருட்களின் விலை அதிகரித்ததால் இறக்குமதி 20 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது.

உலக வர்த்தகம் சற்று சூடு பிடித்துள்ளதால் சரக்குகள் உள்நாட்டுக்கு வருவதும் வெளிநாடுகளுக்குச் செல்வதுமாக இருந்துள்ளது. இருப்பினும், மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 0.7 சதவிகிதம் சரிவடைந்து 29.1 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டிருந்தது. உள்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவை சரிவடைந்ததாலேயே மொத்த ஏற்றுமதியின் மதிப்பு சரிந்துள்ளதாக வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள தகவல் கூறுகிறது.

கடந்த நான்கு மாதங்களில் ஏற்றுமதி சரிவடைவது இதுவே முதல் முறை. பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி 13 சதவிகிதமும், நகைகள் மற்றும் ரத்தினக் கற்களின் ஏற்றுமதி 17 சதவிகிதமும் சரிவடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் இறக்குமதியின் வளர்ச்சியும் சரிவடைந்து 7 சதவிகிதமாக இருந்துள்ளது. இதன் மதிப்பு 42.8 பில்லியன் டாலராகும். இதனால் 13.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon