மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு: வங்கிக்கு உத்தரவு!

ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு: வங்கிக்கு உத்தரவு!

தவறுதலாகச் செயல்பட்ட பாங்க் ஆஃப் பரோடா வங்கி, வாடிக்கையாளருக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என மாநில நுகர்வோர் பிரச்சினைகள் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எம். ராஜேஷ் குமார் என்ற தொழிலதிபர் சென்னை திருவல்லிக்கேணி பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மாநில நுகர்வோர் பிரச்சினைகள் குறைதீர் ஆணையத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் மனு ஒன்றை அளித்தார். அதில், “2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொழில் சம்பந்தமாக என் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.7.09 லட்சத்திற்கு செக் எழுதி, ரெடிங்டன் இந்தியா நிறுவனத்திற்குக் கொடுத்தேன். ஆனால் போதிய இருப்பு இல்லை எனக் கூறி செக் திரும்ப அளிக்கப்பட்டது. ஆனால் எனது கணக்கில் போதிய தொகை இருந்தது. அதேபோல், 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி அதே நிறுவனத்து ரூ.1.3 லட்சத்திற்கு செக் எழுதிக் கொடுத்தேன். மீண்டும், போதிய இருப்பு இல்லை என்று கூறித் திரும்ப அளிக்கப்பட்டது. இது குறித்து பாங்க் ஆஃப் பரோடா வங்கியிடம் விளக்கம் கேட்டேன். ஆனால், அதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை, வங்கியின் மோசமாக செயல்பாட்டால், என் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய வங்கி நிர்வாகத்திடமிருந்து ரூ.25 லட்சத்தை நஷ்ட ஈடாகப் பெற்றுத் தர வேண்டும்”எனக் கோரியிருந்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி தமிழ்வாணன் மற்றும் பாஸ்கரன் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்துவந்தது. இறுதி விசாரணையில், பாங்க் ஆஃப் பரோடோ வங்கி ஒரு மாதத்திற்குள் ராஜேஷுக்கு ரூ.10 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. வங்கியின் மோசமான நடவடிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் ரூ.10,000 அபராதம் விதித்தனர். அபராதத்துடன் சேர்த்து வங்கி நிர்வாகம் ரூ.1 லட்சத்து 10,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon