மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ஒரு அம்பேத்கர் போதும், ஆயிரம் குமாருகள் வேண்டும்: அப்டேட் குமாரு

ஒரு அம்பேத்கர் போதும், ஆயிரம் குமாருகள் வேண்டும்: அப்டேட் குமாரு

சித்திரைத் திருநாள் லீவ் குடுங்கன்னு கேட்டா, நீ நாத்திகனாச்சே எதுக்கு லீவ்னு கேட்டார் மேனேஜர். நான் அம்பேத்கரிஸ்ட் ஆச்சே. அதுக்காச்சும் லீவ் குடுங்கன்னா, உங்ககிட்ட ஒரே காமெடி தம்பி. இருங்க இந்தா வந்துடுறேன்னுட்டு போனவர் தான். இன்னும் வரல. இவர்தான் பொய் சொல்லிட்டு போயிட்டாருன்னு டி.வி ஆன் பண்ணதும், அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் கட்சியாக எங்கள் கட்சி உள்ளதுன்னு அவர் பிறந்தநாள் அன்னைக்கும் மனசாட்சி இல்லாம அபாண்டமா புழுகிட்டு இருக்காங்க. அவர் எழுதுன சட்டங்களை எந்த குற்றவாளிக்கு எதிராவும் பயன்படுத்தாம, மதத்தின் பெயரால் நடந்த குற்றத்தை, மதத்தையே கேடயமா பயன்படுத்தி தப்பிக்க வைக்குறது தான் அல்டிமேட்டா அம்பேத்கருக்கு இவங்க செய்ற அவமானம். இந்தியாவில் மதம் இல்லை சாதி தான் இருக்குன்னு அம்பேத்கர் சொன்னதா படிச்சேன். ஆனா, இப்ப அவர் வந்து காஷ்மீர் சிறுமிக்கு நடந்ததை பாத்தாருன்னா தன் கருத்தை மாத்திக்க தயங்க மாட்டாருன்னு நினைக்கிறேன். ஆனா, இடியே விழுந்தாலும் காது கேக்காதமாதிரி சைலண்டா இருக்க வெள்ளைச்சாமிங்க ரெண்டு பேரும் இருக்க வரைக்கும் தமிழ்நாட்டுக்கு எல்லா பிரச்சினையும் வரும். அதை சட்டரீதியா எதிர்க்க ஆயிரம் அம்பேத்கர் வேண்டும். ஆமாம், ஏன் அம்பேத்கரே திரும்ப வரணும். சுயமா சிந்திக்குற எத்தனையோ குமாருகள் இந்தியாவுல உருவாகலாம். அப்படிப்பட்ட குமாருகள் வளர்ந்து ஒவ்வொரு பேருக்கும் பெருமைப்படுத்தி, பெயரை வைத்தே சாதியைக் கண்டுபிடிக்கிற நடைமுறையை இந்தியாவுல இருந்து ஒழிக்கணும்.

@Er_Thameem

பாரத் மாதா கீ ஜே என்ற 'அவர்களின்' கோஷம் காதில் விழுந்ததும் பதறி ,எழுந்த பாரதமாதா தன் முந்தானையை சரி செய்து கொண்டாள்.

@Kozhiyaar

நல்ல மனைவி அமைவதை விட நல்ல மச்சான், சகலை அமைவது தான் கடினம்!!!

@CreativeTwitz

மோடிக்கு கராத்தே தெரியும் - H.ராஜா!

// அது மான் கராத்தேன்னு எங்களுக்கு தெரியும் ப்ரோ

@Kozhiyaar

செல்ஃபி எடுக்கும் பொழுது அனைவரும் 'இளித்த'வாயர்களே!!

@ShivaP_Offl

ஆதார்கார்ட எல்லா இடத்திலேயும் இணைத்தால்தான் பெனிபிட் கிடைக்கும்ன்னு சொல்றாங்க,

அப்படீன்னா மாமனாரோட ஆதார்கார்டுடன் இணைத்தால்தான்,இனி சீர் செய்வாங்களா மைலார்ட் ..!!

@Kozhiyaar

பொறுப்புணர்ந்து செயல்படுவதற்கு வெற்றியை விட தோல்வியே அதிகம் உதவுகிறது!!!

@abuthahir707

உச்சக்கட்ட டென்ஷன்களில் ஒன்றானது பைக்ல போகும் போது நடு வழியில் பெட்ரோல் இல்லாமல் ஆஃப் ஆகுவது

@manithan_yes

ஜன்னலுக்கு முன்பு, குழந்தையாக இரு;

குழந்தைகளுக்கு முன்பு, ஜன்னலாக இரு.

@ShivaP_Offl

உண்ணாவிரதத்தைகூட டெஸ்ட் மேட்ச் ஸ்டைல்ல நடத்தாம,

சிம்பிளா IPL மேட்சைபோல (20/20)நடத்த ஆரம்பிச்சுட்டாங்க👌👌👇👇

காலையில வீட்ல டிபன் சாப்பிட்டு போயி,மதியானம் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு சக்சஸ் புல்லா உண்ணாவிரதத்தை முடிக்கிறாங்க..!!

@வாசுகி பாஸ்கர்

அரசியல் பத்தி அறிவிச்சதே பென்ஷன் வாங்குற வயசுல, இதுல தள்ளி போகுதாம்

@senthilcp

தலைவரே!உங்களுக்கு கராத்தே தெரியும்னு"உங்க ஆளுங்க பெருமை பேசறாங்களே?எந்த ஸ்கூல்ல கராத்தே"கத்துக்கிட்டீங்க?

மத்தவங்க பைட் போடும்போது பாத்தா இது கராத்தே ,இது குங்பூ னு தெரியும் ,அவ்ளோதான்

@HAJAMYDEENNKS

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை சாப்பிடக்கூடாது என்பதுதான் மாத்திரையை விட கசப்பான மாத்திரை !

@ShivaP_Offl

சில பௌலர்கள் விக்கட் எடுத்துட்டு மைதானத்துல ஓடுறத பார்த்தால்,அவங்க சொந்த ஊருக்கே போயி தாத்தா பாட்டிகிட்ட சொல்லிட்டு வந்துதான் அடுத்த பாலவே போடுற ரேஞ்ச்ல பர்பாமென்ஸ் இருக்கும்

@kumarfaculty

ஏடிஎம், டெபிட், கிரடிட் கார்டுகள் பழமைத் திருடர்களை ஒழித்து விட்டு புதுமைத் திருடர்களை உருவாக்கி விட்டது...!!!

@senthilcp

சார்,வாட்சப்ல பரவுறதுல 50% புரளி தானாமே?இது நிஜமா?

இது கூட புரளி தான் 90% டுபாக்கூர்தான்

@Kozhiyaar

ஆத்திரம் பொங்கி வரும் பொழுது அமைதியாக இருப்பவனே, நல்ல குடும்பத்தலைவனாக அறியப்படுகிறான்!!!

@CreativeTwitz

ஊரெல்லாம் அமைதி திரும்பியதும் போரை துவங்குவேன்- ரஜினி

ஊரே அமைதியான பின்னாடி எதுக்கு போர் , ராபிச்சைக்காரன் மாதிரி

@ilavarasanoffcl

மோடிக்கு கராத்தே தெரியும் - H.ராஜா!

இத படிச்சதும் மோடி சிரிச்சுருப்பார்..

@Selvatwitz

ரூ.1,000 ஐ தொட காத்திருக்கும் வஞ்சிரம் மீன் - செய்தி

கருவாட்டுக் குழம்பு வைத்து மீன் சாப்பிட்ட மாதிரி ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதுதான்..

@Aravindan_kpm

அச்சி மூஞ்ச ஒச்சிருவனு சொல்லுறவன நம்பலாம்

அச்சிற போறன்டா போய்டுனு சொல்லுறவன கூட நம்பலாம்

ஆனா போர் வரட்டும்னு சொல்லுறவன மட்டும் நம்பாத பூட்ட கேஸ் ஆயிடுவ

@வாசுகி பாஸ்கர்

அம்பேத்கர் புகழுக்கு பெருமை சேர்க்கும் கட்சியாக பாஜக உள்ளது - தமிழிசை

அது அம்பேத்கர் இல்லைங்க, சாவர்க்கர். பேசுறப்ப்போ கூடவா ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவீங்க

@Rafeuq

போர் வரும்போது வந்தாலும் சரி, இல்ல உங்களுக்கு போர் அடிக்கும்போது வந்தாலும் சரி...... நோ யூஸ்...

-லாக் ஆஃப்

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon