மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!

லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!

சரக்கு வாகனங்களுக்கான காப்பீட்டு ப்ரீமியத்தை உயர்த்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கான காப்பீட்டு ப்ரீமியத்தை 4 மடங்கு முதல் 11 மடங்கு வரை உயர்த்த காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ராஜா முன்பு இன்று (ஏப்ரல் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் ப்ரீமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக மனுதாரர் வாதிட்டார். இதையடுத்து இந்த மனு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon