மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

காமன்வெல்த்: அதென்ன தங்கப் பதக்கமா?

காமன்வெல்த்: அதென்ன தங்கப் பதக்கமா?

ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், மீதமிருக்கும் எல்லா பதக்கங்களையும் வென்றுவிட வேண்டும் என்ற வெறித்தனத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் கலந்துவருகின்றனர் இந்திய வீரர்கள்.

பெண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்ட சிக்கி- பொண்ணப்பா அஷ்வினி ஜோடி, மலேசியாவின் சோ மெய் குவான்-ஹூ விவியன் ஜோடியிடம் அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்துக்காக ஆஸ்திரேலியாவின் மபாசா-சோமர்விலே ஜோடியுடன் மோதியது. இப்போட்டியில், முதல் இரண்டு செட்களை உடனுக்குடன் கைப்பற்றி வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

ஆண்களுக்கான 75 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் கமரூன் நாட்டின் தியூடோனை எளிதில் வென்று இந்தியாவின் விகாஷ் கிரிஷன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஷரத்-ஞானசேகரன் ஜோடி, இங்கிலாந்தின் திரிங்கல் பால்-பிட்ச்ஃபோர்ட் லியாம் ஜோடியிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தேசாய் ஹர்மீத்-ஷெட்டி சனில் ஷங்கர் ஜோடியும் அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால், அரையிறுதியில் தோற்றுப்போனதால் வெண்கலப் பதக்கத்துக்காக, மற்றொரு அரையிறுதியில் தோற்ற சிங்கப்பூர் அணியுடன் மோதி வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கின்றனர்.

கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டோனா-பில்லே ஜோடியைச் சந்தித்த சௌரவ் கோஷல்-தீபிகா பல்லிகல் ஜோடி தொடர்ந்து இரண்டு சுற்றிலும் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கின்றனர். இரண்டாவது சுற்றில் ஒரு புள்ளியில் தோற்றது அவர்களுக்கான தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைப் பறித்துவிட்டது.

டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரி மெங்க்யூவை எதிர்கொண்ட இந்தியாவின் மனிகா பத்ரா தொடர்ந்து நான்கு செட்களையும் வென்று தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.

இன்று காலை 12 மணி வரையிலும் நடைபெற்ற போட்டிகளில் குத்துச் சண்டைப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போலவே, மீதி ஆட்டங்களிலும் இந்தியர்கள் சாதித்திருக்கின்றனர். பெண்கள் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ நார்டிக் சிஸ்டம் போட்டியில், கனடாவின் ஜெஸ்ஸிகா மெக்டொனால்டை இந்தியாவின் வினேஷ் எதிர்கொண்டார். இதில் அதிகப்படியான டெக்னிகல் புள்ளிகளை வென்று வினேஷ் தங்கப்பதக்கம் வென்றார். வினேஷ் 13 புள்ளிகள் பெற்றிருக்க, ஜெஸ்ஸிகா 3 புள்ளிகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள்125 கிலோ ஃப்ரீஸ்டைல் நார்டிக் போட்டியில் நைஜீரியாவின் சிவினி போல்ட் என்பவரை எதிர்கொண்ட இந்தியாவின் சுமித் 5 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றார். நைஜீரிய வீரர் 0 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் 86 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியின் வெண்கலப் பதக்கப் போட்டியின் கனடாவின் அலெக்சாண்டர் மூர், இந்தியாவின் சொம்வீரிடம் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் கிடைக்க வழிவகுத்தார். பெண்கள் 62 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், நியூசிலாந்தின் டய்லா ஃபோர்டு என்பவரை வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon