மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்!

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்!

காற்றுழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாளை வரை தென் தமிழகத்தின் பல இடங்களில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சித்திரை மாதம் பிறந்ததையடுத்து, சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிற வேளையில், தென் மாவட்டங்களான தேனி, நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நீலகிரி ஆகியவற்றில் மழை கொட்டித்தீர்க்கிறது. குறிப்பாக, நெல்லையில் மதியம் தொடங்கும் மழை மாலை 6 மணி வரை பெய்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், “காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்யும். அதனால், தென் தமிழக மீனவர்கள் நாளை வரை மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon