மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

ரப்பர்: சவால்களைச் சந்திக்கக் கூட்டம்!

ரப்பர்: சவால்களைச் சந்திக்கக் கூட்டம்!

நிலையான ரப்பர் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகக் கொச்சியில் இரண்டு நாட்கள் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரப்பர் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நிலவும் சவால்கள் குறித்த சிக்கல்களை விவாதித்து அதற்குத் தீர்வு காணும் வகையில் ரப்பர் வாரியம் மற்றும் பங்குதாரர்கள் கூட்டமைப்பு சார்பாக இந்த இரண்டு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக ரப்பர் உற்பத்தி, தற்போதைய சந்தை நிலவரங்கள், சவால்கள் மற்றும் மூலோபாயத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களுக்கு கேரளாவில் 'இந்திய ரப்பர் கூட்டம் - 2018' விவாத நிகழ்வு நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் ரப்பர் தொழிற்துறையைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தக் குழு விவாதத்தில் தொழில் துறை வல்லுநர்கள், பங்குதாரர்கள் மற்றும் ரப்பர் துறையைச் சார்ந்த பல்வேறு தரப்பினர் பங்கேற்கவுள்ளனர். மேலும், இந்திய ரப்பர் வாரியத்தின் தலைவர் எம்.கே.சண்முக சுந்தரம் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இந்த இரண்டு நாள் நிகழ்வில் 700 பங்கேற்பாளர்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon