மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

காவிரி மேலாண்மை வாரியம்: சாகும் வரை உண்ணாவிரதம்!

காவிரி மேலாண்மை வாரியம்: சாகும் வரை உண்ணாவிரதம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி திமுக தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் வணிகர் சங்கங்களும் கலந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்தன. அதுபோன்று உச்ச நீதிமன்றத்தின் எஸ்சி/எஸ்டி சட்டத் திருத்தத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னைப் பல்கலைக்கழக பொது நிர்வாகத் துறை மற்றும் ஊடகவியல் துறைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு உடன்படாமல், மாணவர்கள் 4 பேரும் சாகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தொடர்ந்து 5ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை பல்வேறு கட்சியினரும் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon