மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஏப் 2018

புதிய தொழில் தொடங்குபவருக்கு சலுகை!

புதிய தொழில் தொடங்குபவருக்கு சலுகை!

தொழில் முனைவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் உள்பட மொத்த முதலீடு 10 கோடி ரூபாய்க்குள் இருந்தால், அத்தொழில்களுக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஒரு புதிய ஸ்டார்ட் அப் தொழிலில் முதலீடு செய்யும் முதலீட்டாளரின் நிகர மதிப்பு 2 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் அல்லது அவரின் முந்தைய மூன்று நிதியாண்டுகளின் சராசரி வருமானம் 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்படும் இந்த அறிவிப்பினால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு எளிதாக நிதியுதவி கிடைப்பதோடு, தொழில் தொடங்குதல் எளிதாக்கப்பட்டு, ஸ்டார்ட் அப் தொழில்கள் மேம்படும். மேலும், தொழில் முனைதல் ஊக்குவிக்கப்படுவதோடு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

சனி 14 ஏப் 2018