மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஏக்தா கபூரின் புதிய முயற்சி!

ஏக்தா கபூரின் புதிய முயற்சி!

காமசூத்ராவை அடிப்படையாக வைத்துத் தமிழில் வெப் சீரிஸ் தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் தான் ஏக்தா கபூர். இவர் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைத் தயாரித்துவருகிறார். இவரது தயாரிப்பில் வெளியான நாகினி தொடர் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது சினிமா, தொலைக்காட்சித் தொடர்களை அடுத்து வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறார் ஏக்தா. காமசூத்ராவை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ் தொடரில் நடிக்க நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்துவருகிறார்கள்.

காமசூத்ராவை மையமாக வைத்து 1996இல் ஆங்கிலத்தில் மீரா நாயர் இயக்கத்தில் ‘லைட் ஆப் தி டே இந்தியா ஒன்லி’ என்ற திரைப்படம் வெளியானது. ஆனால், அந்தப் படம் சில நாட்களிலேயே இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதே போல் 2013ஆம் ஆண்டு இயக்குநர் ரூபீ பால் இயக்கத்தில் காமசூத்ரா 3D திரைப்படம் உருவானது. இது 2013ஆம் ஆண்டின் 86ஆவது அகாடமி விருதுகளுக்கான பரிந்துரையில் சிறந்த மோஷன் பிக்சர்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளிலும் தேர்வு செய்யப்பட்டது.

இருப்பினும், இந்தப் படம் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தமிழில் காமசூத்ராவைக் கொண்டு வெப் சீரீஸ் தொடரைத் தயாரிப்பது ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon