மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

உயர்கிறதா இந்தியப் பொருளாதாரம்?

உயர்கிறதா இந்தியப் பொருளாதாரம்?

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது முந்தைய மதிப்பீட்டைத் திருத்தியமைத்துள்ள இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம், 7.4 சதவிகித வளர்ச்சியை இந்தியா எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபிட்ச் ஆய்வு நிறுவனத்தின் ஒரு அங்கமான இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் தொழில் துறை உற்பத்தியில் வளர்ச்சி திரும்பியுள்ளதாலும் பருவமழை எதிர்பார்ப்பாலும், வேளாண் துறையின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாகவும் இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டைத் திருத்தியமைத்துள்ளோம். செலவுகளைப் பொறுத்தவரையில் அதிகரித்து வரும் முதலீடுகள் காரணமாக தனியார் மற்றும் அரசுத் துறைச் செலவிடும் அளவு அதிகமாகவே இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியானது நுகர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டில் முதலீடுகளைப் பொறுத்து வளர்ச்சி அதிகரிக்கும்.

2018 பிப்ரவரி மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 7.1 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்ததால் நம்பிக்கை திரும்பியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது மாதமாக இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 7.1 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. பல்வேறு துறைகளில் முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. வேளாண் துறை உற்பத்தியும் மேம்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணிகளால் நடப்பு 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon