மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

விவசாயிகளைக் காக்குமா நேரடி வருவாய் திட்டம்?

விவசாயிகளைக் காக்குமா நேரடி வருவாய் திட்டம்?

விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு வழங்கும் திட்டத்தை அண்மையில் தெலங்கானா மாநில அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. விவசாயிகளுக்கு அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விலைப் பற்றாக்குறைக் கட்டணத்தை விட நேரடி வருமான ஆதரவு வழங்குவது விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிக்குத் தீர்வாக அமையும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

விலைக்கு ஏற்ப அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதால் சந்தை நடைமுறையில் மாற்றம் ஏற்படும். மார்ச் 2018 வரை மத்தியப் பிரதேசத்தில் அமலில் இருந்த பவந்தார் புக்தன் யோஜனா போன்ற விலைப் பற்றாக்குறை கட்டணத் திட்டங்களால் மிகக் குறுகிய தாக்கமே ஏற்படுகிறது. ஏனெனில், உற்பத்தியில் கால் பங்குக்கும் குறைவான அளவையே இத்திட்டங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக வேளாண் பொருளாதார வல்லுநரான அசோக் குலாத்தி தயாரித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேரடி வருமான ஆதரவுத் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு எளிதாகவும், நியாயமாகவும், அனைத்துப் பயிர்களுக்கும் உகந்ததாகவும் உள்ளது. சீனாவும் நேரடி வருமான ஆதரவுத் திட்டத்தைப் போன்றதொரு திட்டத்தை அமல்படுத்தி ஏக்கருக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உள்ளீட்டு ஆதரவு அளித்து வருவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 10,000 ரூபாய் (ஏக்கருக்கு ரூ.24,710) என்றளவில் இத்திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால், தேவையான நிதியின் மதிப்பு 1.97 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசு ஏஜென்சிகளால் கொள்முதல் செய்யப்படும் அரிசி, கோதுமையை உற்பத்தி செய்யும் விவசாயிகள், சர்க்கரை ஆலைகளிடம் உற்பத்தியை விற்பனை செய்யும் கரும்பு விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாத பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் போனால் 1.97 லட்சம் கோடி ரூபாய் என்ற மதிப்பு இன்னும் கணிசமாகக் குறையும்.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon