மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

இளம் நடிகையுடன் ஜோடி சேரும் நாகார்ஜுனா

இளம் நடிகையுடன் ஜோடி சேரும் நாகார்ஜுனா

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக நடிகை அகாங்ஷா சிங் நடிக்கவுள்ளார்.

நாகர்ஜுனா, நானி இருவரும் முதன்முறையாக இணைந்து பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்துவருகின்றனர். ஸ்ரீராம் ஆதித்யா இயக்கிவரும் இப்படத்தை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துவருகிறது. மணிஷர்மா இசையமைக்கிறார்.

இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாகர்ஜுனா தாதாவாகவும், நானி மருத்துவராகவும் நடிக்கின்றனர். நானிக்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனா நடித்துவருகிறார்.

தற்போது, நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக நடிக்க அகாங்ஷா சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சின்னத்திரையிலிருந்து கடந்த ஆண்டு பத்ரிநாத் கி துல்கனியா என்ற இந்திப் படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மல்லி ராவா படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகி கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 14 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon